விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதால் சீமான் கைது செய்யப்படலாம் என தகவல்..
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகை தந்த பிரதமர் மோடிக்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், நாம் தமிழர், த.வா.க, ம.ம.க, தி.க உள்ளிட்ட பல கட்சியினர் கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா கலைஞர்களாக பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து கைதாகினர்.
கைதான அனைவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் கைதாகும் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால், சீமானை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இதனால், சீமான் கைதாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீமானை விடுவிக்காதவரை மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என பாரதிராஜா கூறியுள்ளார். ஐ.பி.எல் போட்டியின் போது போலீசாரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ள கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்