வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி41 ராக்கெட்..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டு வரும் வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை சுமந்தப்டி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
சுமார் 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி 41 ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த செயற்கைக் கோளில் இருந்து பெறும் தகவல்கள், மீனவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். செயற்கைக்கோளின் சிக்னல் ரிசீவர்கள் ப்ளூடூத் மூலமாக மீனவர்களின் செல்போன்களுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கடலில் தாங்கள் இருக்கும் பகுதி, வானிலை எச்சரிக்கைகள் மற்றும் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்கள் அறிந்துகொள்ள முடியும். கடல்சார் கண்காணிப்பு, சாலை மற்றும் வான்வழி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த இந்த செயற்கைக்கோள் உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்