Header Ads

மியன்மாரில் முஸ்லிம் மக்களை படுகொலை செய்வதற்கு நல்ல பதிலடியா இது ? நீங்கள்தான் கூறவேண்டும்

மியன்­மாரில் ரோஹிங்கியா முஸ்­லிம்கள் மீது மியன்மார் அரச படை­யினர் மற்றும் பௌத்த தேசி­ய­வாத அமைப்­புக்கள் மேற்­கொண்டு வரு­கின்ற வன்­செ­யல்­களை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்தி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க ஐக்­கிய நாடுகள் சபை முன்­வர வேண்டும் என புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஐ.நா. சபை­யிடம் எழுத்து மூலம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 


ரோஹிங்கியா முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள் குறித்து ஐக்­கிய நாடுகள் சபையின் புலம்­பெ­யர்ந்­த­லுக்­கான சர்­வ­தேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலை­தீ­வுக்­கான தலைமை அதி­காரி ஜுசெப்பே க்ரொசெட்­டியை கொழும்பில் அமைந்­துள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் புதன்­கிழமை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ், மேற்­படி வேண்­டு­கோளை விடுத்­தி­ருந்தார். 


அத்­துடன், ரோஹிங்கியா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் மற்றும் அதனால் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள தாக்கம் குறித்து தெளி­வான விளக்­க­மொன்றை வழங்­கிய இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ், ஐக்­கிய நாடுகள் சபையின் முன்னாள் செய­லாளர் நாயகம் கொபி அனான், ரோஹிங்கியா முஸ்­லிம்கள் தொடர்பில் மேற்­கொண்ட தீர்­மா­னங்களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார். ரோஹிங்கியா முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் தமது கவ­னத்­துக்கு கொண்டு வந்­ததை இட்டு நன்றி தெரி­விப்­ப­தா­கவும், 


இந்த கோரிக்கை கடிதம் ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மை­ய­கத்­துக்கு உட­ன­டி­யாக அனுப்பி வைக்கப்படும் எனவும் இதன்­போது உறு­தி­ய­ளித்த புலம்­பெ­யர்ந்­த­லுக்­கான சர்­வ­தேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலை­தீ­வுக்­கான தலைமை அதி­காரி ஜுசெப்பே க்ரொசெட்டி, இரா­ஜாங்க அமைச்­சரின் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கைக்கு பாராட்­டுக்­க­ளையும் - நன்­றி­யையும் தெரி­வித்தார். இதே­வேளை இக்­க­லந்­து­ரை­யா­டலின் போது, “மியன்­மாரில் ராங்கைன் மாநி­லத்தில் சுமார் 11 இலட்­சத்­துக்கும் அதி­க­மான ரோஹிங்கியா முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். அவர்கள் அங்கு 1200 வரு­டங்­க­ளுக்கு மேல் வாழ்ந்து வரு­வ­தாக வர­லாற்றுச் சான்­றுகள் இருந்தும் அம்­மக்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்க மியன்மார் அரசு முன்­வ­ர­வில்லை. 


குடி­யு­ரிமை இல்­லா­மையால் எந்த உரி­மையும் அற்ற சமூ­க­மாக மிகவும் மோச­மான முறையில் பௌத்த தேசி­ய­வாத அமைப்­புக்­க­ளாலும் - மியன்மார் அர­சி­னாலும் ஒடுக்­கப்­பட்டு வரு­கின்­றனர். உலகின் மிகப்­பெ­ரிய ‘நாடற்ற சிறு­பான்மை சமூ­க­மாக’ அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் ரோஹிங்கியா முஸ்­லிம்கள் மீது பௌத்த தேசி­ய­வாத அமைப்­புக்­க­ளி­னதும் - மியன்மார் இரா­ணு­வத்­தி­னதும் வரம்பு மீறிய அட்­டூ­ழி­யங்கள், 


தாக்­கு­தல்கள் கடந்த சில தினங்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளன” என சுட்­டிக்­காட்­டிய இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ், ரோஹிங்கியா முஸ்­லிம்கள் விட­யத்தில் சர்­வ­தேச சமூகம் மற்றும் ஐ.நா. தலை­யீடு செய்து அம்­மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார். அத்­துடன், ரோஹிங்கியா முஸ்­லிம்கள் மீதான தாக்குதல்களால் இலங்கை முஸ்லிம்கள் மிகவும் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதுடன், தங்களது எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர். எனவே, இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இந்த விடயத்தில் ஐ.நா.சபை சுமுகமான தீர்வினை வழங்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.