திருமணத்துக்கு முன்னாள் காதலிகளுக்கு அழைப்பு விடுத்த பிரித்தானிய இளவரசர் ஹரி!

பிரித்தானியா இளவரசர் ஹரி தனது திருமணத்தை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இவர் தனது திருமணத்திற்கு பழைய காதலிகள் இருவரை கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் மே 19ஆம் திகதி அமெரிக்க நடிகை மேகன் மெர்கலுக்கும், ஹரிக்கும் திருமணம் இடம்பெறவுள்ளது. இத்திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தனது முன்னாள் காதலிகளான கிரிசீடா போனஸ் மற்றும் செல்ஸி டாவி ஆகியோருக்கு ஹரி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியின் பழைய காதலிகளான கிரிசீடா மற்றும் போனஸடன் இன்னும் நல்ல நண்பராகவே உள்ளதால் அவர்கள் பெரிதாக எண்ணமாட்டார்கள் என நினைப்பதாக ஹரியின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மெர்க்கல் தனது முன்னாள் கணவர் டிரீவன் இங்கிலிசனை திருமணத்துக்கு அழைக்கமாட்டார் என்றே தெரிகிறது.ஜிம்பாப்வேயில் பிறந்த செல்ஸியை பாடாலையில் கற்கும் போதே போதே ஹரி டேட்டிங் செய்தார்.
பின்னர் சிறிய இடைவெளிவிட்டு அதன் பின்னர் இருவரும் ஒன்றாக உலா வந்தார்கள்.கடந்த 2011இல் ஹரி செல்ஸியை பிரிந்தார்.
இதையடுத்து தனியாக இருந்த ஹரி நடிகையும் மொடலுமான கிரிசீடாவுடன் இரண்டாண்டுகள் பழகி வந்த நிலையில் அவரை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்