நைஜிரியாவில் கடத்தப்பட்ட 110 பாடசாலை சிறுமிகளை மீட்க நடவடிக்கை..

நைஜிரியாவில் கடத்தப்பட்ட 110 பாடசாலை சிறுமிகளை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
போஹோ ஹராம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் இந்த பிள்ளைகளை மீட்கும் பணிகளில் மேலதிக படையினருடன் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நைஜிரியாவின் யோபே மாநிலத்திலுள்ள டப்சீ நகரிலுள்ள பாடசாலையொன்றிற்குள் பிரவேசித்த ஜிகாத் ஆயுததாரிகள் அங்கு கல்வி பயின்ற பிள்ளைகளை கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் ஒரு தேசிய அனர்த்தம் எனக் கூறியுள்ள ஜனாதிபதி மொஹமது புகாரி, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஷிபொக் பகுதியில் வைத்து பாடசாலை சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தற்போதைய சம்பவம் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டப்சி பகுதியிலுள்ள முக்கியமான சோதனைச் சாவடிகளில் இருந்து படையினர் மீளப் பெறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை கடத்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்