ஆவா குழுத் தலைவரின் நெருங்கிய கூட்டாளியை மடக்கிப் பிடித்த பொலிஸார்!
யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் தலைவர் என சொல்லப்பட்ட சன்னாவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பொலிஸாரே இந்த தகவலினை வெளிப்படுத்தியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த கூட்டாளியை ஆணைக்கோட்டை பகுதியில் வைத்து நேற்று கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இவர் சாவற்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார், யாழில் இடம்பெறும் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் அன்னார் தொடர்புடையவர் எனவும் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபர் குறித்து இரகசிய தகவல் ஒன்று தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அதற்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகளின் பின்னர் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் சன்னா சிறையிலிருந்து தப்பிச் சென்றமை தெரிந்ததே. அந்தக் காரணத்தினால் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்