ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து.. 32 பேர், பரிதாபமாக பலியான சோகம்..
மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் உள்ள தாயுலாடாபாத் பகுதியில் இருக்கும் பாலிகாத் பாலத்தில் சுமார் 50 பயணிகளுடன் சென்ற பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
சம்பவம் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படகுகளை பயன்படுத்தி பயணிகள் மீட்கப்பட்டனர். சிறிது நேரம் கழித்து வந்த தேசிய பேரிடர் மீட்ப்புக் குழுவினர் சடலங்களை மீட்கும் பணியில் இறங்கினர். தற்போது வரை 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில போக்குவரத்துத்துறை மந்திரி சுவேந்து ஆதிகாரி மற்றும் செயலாளர் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இறந்தவர் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்