Header Ads

டெல்லியில் போலீசாருக்கு தகவல் கொடுத்த பெண், நிர்வாணமாக்கி ஊர்வலம்.. பெண்களே செய்த காரியம்..

புதுடெல்லியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்த பெண்மணியை குமபல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நரேலா பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நீண்ட காலமாக கொடிகட்டிபறந்து வந்துள்ளது. இதைக்கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் வீணான நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களை தகவல் அளிக்கும்படி போலீசார் கேட்டுக்
கொண்டுள்ளனர். இந்த நிலையில் அந்தபகுதியில்  உள்ள பெண்மணி ஒருவர் துணிச்சலுடன் தகவலை திரட்டி போலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல்  போலீசாருக்கு தகவல் அளித்ததாக அப்பகுதியில் உள்ள பெயர் வெளிப்படுத்தாத அப்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். அது மட்டுமின்றி 25-கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து அப்பெண்மணியை ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்தியுள்ளனர்.

இத்தகவல் அறியவந்த மகளிர் ஆணையம் உடனடியாக அப்பகுதிக்கு சென்று அப்பெண்மணியை மீட்டுள்ளது. மேலும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சந்தேகத்துக்குரிய நபர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். நரேலா பகுதியில் முன்னிரவு நடந்த அதிரடி சோதனையில் ஒரு குடியிருப்பில் இருந்து மட்டும் 300 மது பாட்டில்களை  போலீசார் கைப்பற்றியுள்ளனர்.குறித்த குடியிருப்பானது போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.