செங்கல்பட்டு புறவழிச்சாலையில் அடுத்தடுத்து அரசு பஸ்கள் மோதல்! கதறும் உறவினர்கள்!
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் 4 அரசு பேருந்துகள் ஒன்றன்மீது ஒன்று மோதிய விபத்தில் ஒரு பெண் பலியானார். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் அடுத்தடுத்து அரசு பஸ்கள் மோதல்: ஒருவர் பலி, 30 பேர் காயம்
சென்னை:
ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் அரசு விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்ல பலர் இன்று மதியம் முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிய தொடங்கினர்.
விடுமுறை கால கூட்டத்தை சமாளிக்க அரசு சார்பில் 700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு சார்பில் இன்று காலை முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கிடைக்கும் பேருந்துகளில் ஏறி சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை செங்கல்பட்டு புறவழிச் சாலையில் சென்ற அரசு பேருந்துகள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரு பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் சிக்கி ஒரு பெண் பலியானார். மேலும், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி கொண்டதால் 30 பேர் காயம் காயமடைந்தனர்.
இந்த விபத்தால் செங்கல்பட்டு புறவழிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்