மடுவில், திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்.. கூக்குரல் இட்டதால் தப்பி ஓட்டம்..
மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள க.கோகிலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குறித்த வீட்டில் யாரும்மில்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த இரு இளைஞர்கள் குறித்த வீட்டினுள் இருந்த moter ( நீர் இறைக்கும் இயந்திரம் ) சிமெந்து, கம்பிகள் என சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு வீதிக்கு வந்த வேளை அவ் வீதியால் யாழ்ப்பாணம் செல்வதற்காக சென்ற நபர் சந்தேகமடைந்து கூக்குரல் இட்டதைக் கண்டதும் எடுத்த பொருட்களை வீதியில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர், குறித்த நபர்கள் தொடர்பான அங்க அடையாளங்களை சரியாக கவனிக்கவில்லையெனவும் ஆனால் வெளியூரைச் சேர்ந்தவர்கள்தான் எனவும் அவ்வழியால் வந்து கூக்குரல் இட்ட நபர் தெரிவிக்கின்றார்..
இச் சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்படவில்லை என்பதுடன் இதே ஊரில் இதற்கு முன் இடம் பெற்ற இரண்டு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் எந்த வித நடவடிக்கைகளும் போலீசாரினால் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்