Header Ads

ஜெருசலேம் விவகாரம்: டிரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - ராணுவத்தினர் துப்பாக்கி சூட்டில் 2 பாலஸ்தீனர்கள் பலி..

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறிவருகிறது. ஆனால், இதை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே, ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில தினங்களுக்கு முன் அறிவித்து டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியமைக்க உத்தரவிட்டார். டிரம்ப் முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகளும், ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் நேற்று திரளாக ஒன்றுகூடினர். அவர்கள் ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை தடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது பேரணியில் ஈடுபட்டவர்கள் டிரம்ப் உருவப் படத்தை தீயிட்டு எரித்தனர். இதை தடுக்க முயன்ற ராணுவத்தினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, ராணுவத்தின பேரணியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். முதல் கட்டமாக இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.