புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள முகநூல்..!

தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியதும், பல்வேறு பயனர்களைக் கவர்ந்துள்ள சமூக வலைதளமுமான, முகநூலானது, புதிய வசதியொன்றை வழங்கியுள்ளது. முன்னர் வழங்கிய போக் (poke) வசதியுடன் தற்போது புதிதாக மேலும் சிலவற்றைச் சேர்த்துள்ளது.
இந்த வசதியின் மூலம் பயனர்கள் அவர்களின் நண்பர்களை போக் செய்வதைப் போல் கண் சிமிட்டுதல், ஹய்பை, ஹக், கைகளை அசத்தல் போன்ற செய்கைகளை அனுப்ப முடியும். இந்தப் புதிய வசதியானது தற்போது அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, லண்டன், கொலம்பியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்த முகநூலில் புதிதாக ஹலோ என்ற பொத்தான் இணைக்கப்பட்டுள்ளது. அதனை அழுத்துவதன் மூலம் பிற வசதிகளைப் பயனர்கள் தேர்வு செய்துகொள்ள முடியும்.இந்த வசதிகள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என முகநூல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பயனர்கள் தங்கள் விரும்பும் நண்பர்களுடன் உரையாட விரும்பும்பொழுது அதனைத் தெரிவிக்கும் வகையில் போக் என்ற வசதியை அந்நிறுவனம் வழங்கியிருந்தது. அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள இந்த வசதி, பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்