Header Ads

இந்தியாவில் தொடரும் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி..

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் நேற்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4:28 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம், இரவும் இதே பகுதியில் 4.4 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இந்நிலையில், மேகாலயா மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 என பதிவாகியுள்ளதாக இந்திய புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.