Header Ads

சிரியாவில், பேருந்து மீது வெடி குண்டு தாக்குதல் - 8 பேர் பலி..

சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், இன்று சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள அக்ராமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தினர். பேருந்து மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல்-பாத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் பாதி பேர் மாணவர்கள் என கூறப்படுகிறது.

சிரியாவின் பல இடங்களில் இது போன்ற பல தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.