அத்தையை காப்பாற்ற முயன்றபோது, பலியான சகோதரர்கள்..
மும்பை லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் கமலா மில்ஸ் வளாகம் உள்ளது. இங்கு ஓட்டல்கள், மது விடுதிகள், பிரபல தனியார் தொலைக்காட்சிகள் உள்பட பல அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இங்குள்ள 4 மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள ‘ஐ அபோவ்’ என்ற ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 55 பேர் காயம் அடைந்தனர்.
தீவிபத்தில் இறந்தவர்களில் பிறந்தநாள் கொண்டாடிய 28 வயது பெண் குஷ்பூ பன்சாலியும் ஒருவர். பிறந்தநாள் ‘கேக்’ வெட்டிய 30 நிமிடத்தில் தீவிபத்தில் சிக்கி இவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தீயில் சிக்கிய பலரை மும்பையை சேர்ந்த தரியா லலானி (26), விஷ்வா லலானி (24) ஆகிய சகோதரர்கள் காப்பாற்றினர். இறுதியில் அவர்கள் தங்களது அத்தையை காப்பாற்ற முயன்ற போது தீயில் கிக்கி உயிரிழந்தனர்.
அவர்கள் இருவரும் அமெரிக்காவின் மிச்சிகனில் பணிபுரிந்தனர். திருமண விழாவில் பங்கேற்கவும், குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடவும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து மும்பை வந்தனர்.
தீ விபத்து நடந்த ஓட்டலில் வாசலின் நுழைவு வாயிலில் தரியா, விஷ்வா ஆகியோர் தங்களது அத்தை பிரமிளா கெனியா (48)வுடன் அமர்ந்திருந்தனர். தீ பிடித்தவுடன் கரும் புகை மூட்டம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். அப்போது அவர்களுக்கு தங்களது அத்தையின் நினைவு வந்தது. எனவே அவர்கள் மீண்டும் உள்ளே சென்று அவரை தேடினர்.
இறுதியில் அவரும் மேலும் சிலரும் கழிவறையில் சிக்கிக்கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதில் இருந்து அவர்களால் மீண்டுவர முடியவில்லை. இறுதியில் சகோதரர்கள் தரியா லலானி, விஷ்வா லலானி மற்றும் பிரமிளா கெனியா மற்றும் அந்த அறையில் சிக்கியிருந்த அனைவரும் மூச்சுத்திணறி இறந்துபோனார்கள். அவர்களை பிணமாகத்தான் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இந்த தீ விபத்தில் பலியானவர்களில் சர்ப்ஜித் பரிடாவும் ஒருவர். இவர் மோஜோஸ் பிஸ்ட்ரோ. மது விடுதியில் பணிபுரிந்தார். ஒடிசாவை சேர்ந்தவர். பலியான மற்றொரு பெண் யாஷா தாக்கர் (22). அகமதாபாத்தை சேர்ந்த இவர் கல்லூரி மாணவி ஆவார்.
தனது உறவினருடன் புத்தாண்டை கொண்டாட 3 நாட்களுக்கு முன்புதான் முதன் முறையாக மும்பை வந்தார். ஓட்டலில் கழிவறைக்கு சென்றபோது தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்