Header Ads

நோயாளியின் 3 பற்களை தொடர்ச்சியாக பிடுங்கியதால், உயிரிழந்த பரிதாபம்..

கர்நாடகா மாநிலம் குபாலி நகரில் அப்துல் கதேர் என்பவர் பல் வலி என மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவருக்கு டாக்டர் வீரேஷ் மாகால்ட் என்பவர் சிகிச்சை அளித்தார். டாக்டர் அப்துலின் மூன்று பல்களை தொடர்ச்சியாக பிடுங்கியுள்ளார்.

இதனால் அவருக்கு ரத்தம் அதிக அளவு வெளியேறியது. அவரை கே.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அப்துல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்துலின் சகோதரர் ரசாக் போலீசில் புகார் அளித்தார். அதில், அப்துலின் மரணத்திற்கு பல் மருத்துவர் தான் காரணம். மேலும் அவர் அப்துல் மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்த போது கடிதம் ஒன்றில் கைரேகையை பதிவு செய்து விட்டு சென்றார். அந்த கடிதத்தில் அப்துலின் இந்த நிலைமைக்கு பல் மருத்துவர் காரணம் அல்ல. அவருக்கு இழப்பீடாக 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது எனக்கூறப்பட்டிருந்தது.

ஆனால் இதனை பல் மருத்துவர் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். நோயாளிக்கு ரத்த கசிவு ஏற்பட்டது குறித்து யாரும் எனக்கு தகவல் அளிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகே அவர் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். நான் மருத்துவமனைக்கு சென்றேன். அவர்கள் மிகவும் ஏழ்மையில் இருப்பதால் மனிதாபிமான அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மேலும் நான் கடிதத்தில் கைரேகை பெறும் போது அப்துல் விழித்திருந்தார் என டாக்டர் வீரேஷ் மாகால்ட் கூறினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.