வேலைக்குப் போகச்சொன்னதால், மனைவியை கொலை செய்த கணவன்..
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள சேர்வைக்காரன் ஊரணி கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32), விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (27). இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
செல்வத்துக்கு கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் இல்லை. இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டார்.
எனவே சரோஜா தனது கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார். இதற்காக தனது நகையை விற்றும் பலரிடம் கடன் வாங்கியும் வெளிநாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு செல்வத்தை வெளி நாட்டு வேலைக்கு ஏஜெண்டு மூலம் அனுப்பினார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரோஜா கடன் வாங்கி வேலைக்கு அனுப்பியும் செல்லவில்லையே என்று கூறி கணவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.
நேற்றுக் காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவின் கழுத்தில் காலால் மிதித்தார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்பிரிவு தலைமை காவலர் வரதராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை கொலை செய்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்