Header Ads

150 அடி தண்ணீர் தொட்டியின் மேல் நின்று, செல்பீ எடுக்க முயன்ற வாலிபர்களுக்கு நேர்ந்த கெதி..

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீருட் மாவட்டத்தில் உள்ள சைனிக் விகார் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் அங்குள்ள தண்ணீர் தொட்டி மீது நின்று செல்பீ எடுக்க முயன்றனர். அப்போது நிலைதடுமாறி இருவரும் தொட்டிக்குள் விழுந்தனர். 150 அடி உயரம் கொண்ட தொட்டியில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் இருவரும் நீரில் மூழ்கினர்.

அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருவரும் அனிமேஷன் படித்து வருகின்ற சோஷிட் சிங் மற்றும் ரிஷாப் ஷர்மா என்பது தெரிய வந்தது. செல்பீ எடுக்க முயன்ற வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.