Header Ads

ஏலத்தில் விடப்பட்ட கிராமம்! வயதான 20 நபர்கள் மட்டுமே வசிக்கின்றனர்!!

கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆல்வின் என்ற கிராமத்தில் பல கட்டிடங்கள் உள்ள நிலையிலும் வயதான 20 நபர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இந் நிலையில் இந்த கிராமம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் யூரோக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்தின் நுழைவாயிலில் முழு கிராமத்தையுமே ஒரு லட்சத்து 25 ஆயிரம் யூரோக்கு ஏலத்தில் விடுவதாக விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது இக் கிராமத்தை சுற்றியுள்ள இடங்களில் இளைஞர்களுக்கு ஹிட்லர் பயிற்சி அளித்தாராம். 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனி ஒன்றாக இணைந்தபோது இக் கிராமத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் இருந்ததாகவும் பின்னர் 1991 ஆம் ஆண்டு Coal Briquette Plant மூடப்பட்போது பலரும் வேலைக்காக கிராமத்தை விட்டு வெளியேறியதாகவும் Andreas Claus என்ற மேயர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிராமத்தை விட்டு சென்ற இளைஞர்கள் மீண்டும் வரவில்லை என 1945 ஆம் ஆண்டில் இருந்து வசித்து வந்த பீற்றர் என்பவர் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.