Header Ads

லண்டன் உங்களை வரவேற்கிறது: சர்ப்ரைஸ் தந்த மேயர்..



இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களை லண்டன் அனைத்து வகையிலும் வரவேற்கத் தயாராக உள்ளது என நகர மேயர் சாதிக்கான் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் மேயர் சாதிக்கான் ’லண்டன் தங்களை வரவேற்கிறது’ என்ற தனது பரப்புரைக்காக இந்தியா, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பிரசார பரப்புரைக்காக இந்தியாவில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்தவர் நேற்று வாகா எல்லை வழியாக நடந்தே பாகிஸ்தான் சென்றடைந்தார்.
கராச்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாதிக்கான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு லண்டனில் இருந்து ஒரு செய்தி கொண்டுவந்துள்ளேன்.
அதாவது, லண்டன் நகரம் கல்வி, தொழில் மற்றும் சுற்றுலா என அனைத்து வகையிலும் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கிறது.
லண்டன் இந்து, முஸ்லிம், சீக்கியர் என அனைவருக்கும் மத, இன பேதமின்றி வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.