Header Ads

மிகப்பெரிய விபத்தில் இருந்து, பல உயிர்களை காப்பாற்றிய 12 வயது சிறுவன்..

பீகார் பாஹகா பகுதியில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் விரைவாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினான். தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி ரெயிலின் முன் காட்டி நிறுத்துமாறு கூறினான். சிவப்பு நிற சட்டையை பார்த்த ரெயில் ஓட்டுநருக்கு ஒன்றும் புரிய வில்லை. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட ஓட்டுநர் ரெயிலை நிறுத்தினார்.

ரெயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததால் தான் சிறுவன்  ரெயிலை நிறுத்தினான் என்பதை உணர்ந்த அனைவரும் சிறுவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தண்டவாளத்தில் விரிசல் இருப்பது தெரியாமல் ரெயில் சென்றிருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் அந்த விபத்து ஏற்படாமல் பல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு வெகுமதி அளிக்கப்போவதாக அம்மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.

குளிர்காலங்களில் ரெயில் தண்டவாளங்களில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படும். ஆனால் அதனை முறையாக சோதனை செய்து பராமரிக்க வேண்டும். இனி மேல் இது போன்ற தவறுகள் ஏற்படாது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.