Header Ads

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 07 பேர் மர்ம மரணம்..

தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டத்தின் ராஜபேட்டா பகுதியில் உள்ள கோழி பண்ணையில் பாலாராஜூ என்பவர் வேலைப்பார்த்து வந்தார். அவர் சித்திபேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோழி பண்ணையில் வேலைப்பார்ப்பதற்காக சமீப காலமாக தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமனார்-மாமியாருடன் அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

அவர் நேற்று வேலைக்கு வராததால் அவருடன் பணிபுரிபவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள அனைவரும் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேரின் உடலை போலீசார் மீட்டனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மரணமடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.