மருத்துவமனை படுக்கையிலிருந்தே, 10 ஆண்டுகளாக பள்ளி நடத்தி வரும் பெண்..
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷகாரான்பூர் பகுதியில் நேஷனல் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
இந்த பள்ளியை உமா சர்மா என்பவர் தொடங்கினார். தொடங்கிய நான்கு ஆண்டுகளில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் படுத்த படுக்கையானார். அவருடைய கை மற்றும் முகம் மட்டுமே இயங்கும். ஆனால் அவர் தனது நம்பிக்கையை தளர விடாமல் பள்ளியை நடத்த முடிவு செய்தார். செல்போன் மூலம் தினமும் பள்ளியை நேரலையாக கண்காணித்து வருகிறார். மேலும் மாணவர்களுக்கு பாடமும் நடத்தி வருகிறார். 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் இருந்து கொண்டே பள்ளியை உமா நடத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியின் கட்டணம் மற்ற பள்ளிகளை விட குறைவாக உள்ளது. மாணவர்களுக்கு கற்பித்து கொடுக்க வேண்டும் என்ற உமாவின் ஆர்வம் அனைவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்