Header Ads

புதுமணத்தம்பதியின் தேனிலவு உல்லாசத்தை படம் பிடித்த ஓட்டல்!

இலங்கையில் உள்ள குளிப்பாட்டு என்ற இடத்தில் ஒரு அதி நவீன நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் புதிதாக திருமணமான புதுமண தம்பதி தேனிலவு கொண்டாட்டத்திற்காக வந்திருந்தனர்.

அப்போது அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவில் இரண்டு துளைகள் இருந்தது.


இந்த துளைகள் வழியாக பார்த்தால் அந்த அறை முழுவதும் தெரியும் வகையில் இருந்தது.

எனவே இந்த துளைகள் வழியாக ரகசிய காமெரா வைத்து புதுமண தம்பதியின் உல்லாசத்தை பதிவு செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமண தம்பதி இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் சோதனை செய்தபோது அந்த துளை வழியே அந்த முழுவதும் தெரியும் வகையில் இருந்தது.

மேலும் இதற்கு அடுத்தடுத்த அறைகளிலும் இதே போன்று துளைகள் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது புதுமண தம்பதி பில் கட்டணம் செலுத்தாமல் தவிர்ப்பதற்காக இப்படி ஒரு அபாண்டமான புகாரை தெரிவித்து உள்ளனர் என்றனர். ஆனாலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.