மகாராணியும் வரி ஏய்ப்பில் சிக்கினார்; லண்டனே ஆட்டம் கண்ட செய்தி இதுவாக தான் இருக்கும் !
பிரித்தானிய மகாராணியில் பல மில்லியன் பணம், கேவ்மான் தீவுகளில் முதலீடு செய்யப்பட்டு. அதனூடாக அதற்கான வரியை கட்டாமல் ராஜ குடும்பம் ஏமாற்றியுள்ளது என புதிதாக கசிந்துள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு செய்தியை அதிர்வு இணைய வாசகர்களுக்காக நாம் தருகிறோம். ஐரோப்பாவில் இயங்கி வரும் பல கம்பெனிகள், தமது தலைமையகத்தை அயர்லாந்தில் வைத்திருப்பது வழக்கம். ஏன் எனில் அங்கே இயங்கினால் பெரும் வரி கட்டவேண்டிய அவசியம் இல்லை. இது போல பிரித்தானிய மகாராணியாரின் சுமார் 450 மில்லியன் பவுண்டுகள், கேவ்-மான் தீவுகளில் முதலீடு செய்யப்பட்டு பெரும் வருமானத்தை ஈடி வருகிறது.
இதனூடாக பெறப்படும் பணத்திற்கு எந்த ஒரு வரியும் கட்டவேண்டிய அவசியம் இல்லை. இதேவேளை அங்கிருந்து பணத்தை லண்டனுக்கு மாற்றி என் நேரமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இதன் பின்னணியில், ஒரு குழு இயங்கி வருவதாகவும். அமெரிக்க அதிர்பர் டொனால் ரம்பின் உதவியாளர். அமெரிக்க ராஜங்கச் செயலாளர் ஆகியோர் இதில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் பெரும் பணம் படைத்தவர்களின் பணத்தை, எப்படி வரி கட்டாமல் முதலீடு செய்து பெரும் லாபத்தை சம்பாதிக்கலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.
பிரித்தானியாவை பொறுத்தவரை, நாம் கட்டும் வரிப் பணத்தில் ஒரு கணிசமான தொகையை பிரித்தானிய மகாராணிக்கு அரசு மானியமாக கொடுத்து வருகிறது. அது சுமார் 76 மில்லியன் பவுண்டுகள் ஆகும். ஒட்டு மொத்ததில் மகாராணியார் வரும் தோறும் 76 மில்லியன் பவுண்டுகளை மானியமாகப் பெற்று வருகிறார். இன் நிலையில். தன்னிடம் உள்ள பணத்தை , மேலும் அதிகரிக்கவும். அதற்கு வரி கட்டாமல் இருக்கவும் இப்படி ஒரு காரியத்தில் அவர் நேரடியாக இறங்கினாரா ? இல்லை அவரது பணத்தை வேறு சிலர் இவ்வாறு முதலீடு செய்தார்களா என்று விசாரணை இடம்பெற்று வருகிறது. எது எப்படி இருந்தாலும் அவர் செல்வாக்கு என்றுமே சரியப் போவது இல்லை.
காரணம் என்னவென்றால், உலகில் பல நாடுகளை கைப்பற்றிய அவரது மூதாதையர்கள் தான். ஆனால் அன் நாடுகளில் இருந்து சுறண்டுவதை சுறண்டி அனைத்தையும் பிரித்தானியா கொண்டுவந்து தனது நாட்டை செல்வச் செழிப்பாக மாற்றியது வேறு யாரும் அல்ல மகாராணி எலிசபெத் தான். அந்த வகையில், பிரித்தானிய மக்கள் அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப் போனால், தலைவர் பிரபாகரன் என்றால், சிங்களம் அவரை தேச துரோகி என்பார்கள். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை அவர் ஒரு உயர்ந்த உண்ணத மனிதர். அதுபோல தான் பிரித்தானியாவை பொறுத்தவரை , மக்கள் அவரை ஒரு உலக அடையாள சின்னமாக பார்க்கிறார்கள். காந்தி தாத்தா , நேரு, இந்திரா காந்தி, நெல்சன் மண்டேலா , ஏன் ஜோன் கென்னடி என்று பலரை சந்தித்தவர் மகாராணியார். உயிர் வாழும் ஒரு காவியம் அவர் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்