Header Ads

பச்சை நிறமாக மாறிய வானம்; மக்கள் ஆச்சரியம் !


அலாஸ்காவில் பச்சை   நிறமாக   மாறிய வானம்;  மக்கள் ஆச்சரியம் !

அலாஸ்காவின் வடக்குப் பகுதியில், வானமானது  பச்சை நிறமாக மாற்றமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
அலாஸ்காவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட காலநிலை மாறுபாட்டினாலும், சூரிய ஒளி பூமியில் விழும்போது ஏற்பட்ட ஒளிச் சிதறல் காரணமாகவும் அலாஸ்காவில் வானம் பச்சை நிறமாக மாறியுள்ளது.
சூரிய ஒளி பனிக்கட்டி மீது ஆழமாக ஊடுருவும் போது, இதுபோன்று வானம் நிறமாறுபாட்டுடன் தெரிவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் போன்ற துருவப் பகுதிகளில், பச்சைநிற வானம் அவ்வப்போது காணப்படும் என்று  அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.