திருப்பதி கிருஷ்ணர் கோவிலில் நடந்த, நடிகை நமீதாவின் திருமணம்..!
விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை நமீதா, கவர்ச்சி கதாநாயகியாக ரசிகர்களிடம் பிரபலமானவர். பிக்பாஸ் உள்ளிட்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் அவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.
தனது நீண்ட நாள் காதலரும் நடிகருமான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்ய உள்ளதாக நமீதா அண்மையில் அறிவித்தார். அதன்படி இருவருக்கும் இன்று அதிகாலை திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கிருஷ்ணர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் சரத்குமார், அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் நமீதாவின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுடன் பங்கேற்ற நடிகைகள் காயத்ரி ரகுராம், ஆர்த்தி, நடிகர் ஹரீஸ் கல்யாண் உள்ளிட்டோரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருமணத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நமிதா, தொடர்ந்து சினிமாவில் நடிக்கவிருப்பதாகவும், இதற்கு கணவர் வீரேந்திர சவுத்ரி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்