Header Ads

முழு குடும்பத்திற்கும் சாகும் வரை பாதுகாப்பு- ஹாலிடே பணம் என பல டீல் - முகாபே



சிம்பாபே நாட்டின் ஜனாதிபதியாக, 37 ஆண்டுகளாக  இருந்து வந்த முகாபே கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பதவி விலகினார். இதற்காக அவர் போட்ட டீல் என்ன தெரியுமா ? தனக்கும் தனது முழு குடும்பத்திற்கும் பாதுகாப்பு. மேலும் தன்னையோ இல்லை தனது குடும்பத்தார் மீதோ எந்த குற்றச் சாட்டை வைத்தாலும் நீதி மன்றம் செல்ல முடியாது. ஏன் எனில் ராஜதந்திர பாதுகாப்பு. மேலும் ஆண்டு தோறும் விடுமுறைக்கு செல்ல பணம் தரவேண்டும். அத்தோடு முன் நாள் ஜனாதிபதிக்கான மாதாந்த கொடுப்பனவு என்று பல டீல் களை போட்டு தான் முகாபே பதவி விலகி உள்ளார்.

தற்போது சிம்பாபே நாட்டை ஆழும் அரசு, இந்த டீலுக்கு இணங்கி கைச்சாத்திட்டுள்ளது என அறியப்படுகிறது. இதனால் இனிமேல் முகாபேயை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது உறுதியாகியுள்ளது. பல போர் குற்றங்களை புரிந்துள்ள முகாபே. அன் நாட்டில் வசித்த பழங்குடி மக்கள் 20,000 ஆயிரம் பேரை சுட்டு தள்ள உத்தரவு பிறப்பித்து. அனைவரையும் கொலை செய்தார். ஆனால் அதற்கான தண்டனையில் இருந்தும் தற்போது தப்பிக் கொண்டார். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.