Header Ads

ஐ.எஸ். தலைவன், அல்-பாக்தாதி சிரிய நகரில்..!

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை உலக நாடுகளின்படை அழிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைவசம் இருந்த மொசூல் நகரத்தை அந்நாட்டு ராணுவம் அமெரிக்க படை உதவியுடன் மீட்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோல்வியை தழுவினர். சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர், அவர்கள் வசமிருந்த பகுதி மீட்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவன் அல்-பாக்தாதி கொல்லப்பட்டான் என தகவல்கள் வெளியாகியது. 

சிரிய ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டது. ரஷியாவும் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவன் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக எங்களிடம் ஆதாரங்கள் இல்லை என பெண்டகன் கூறியது. இதனால் அல்-பாக்தாதி கொல்லப்பட்டது தொடர்பாக உறுதியான தகவல்கள் இல்லை.

இந்நிலையில் ஐ.எஸ். தலைவன் அல்-பாக்தாதி சிரிய நகரில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அல்பு காமல் நகரில் சிரியா ராணுவம் மற்றும் ஆதரவு படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அல்-பாக்தாதி அங்கிருந்தான் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அல்பு காமல் நகரை கைப்பற்றிவிட்டதாக சிரிய ராணுவம் இவ்வாரம் அறிவித்தது. இருப்பினும் அல்-பாக்தாதியை ராணுவம் பிடித்ததா? என்பது தொடர்பாக செய்திகள் வெளியாகவில்லை.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.