Header Ads

ஜிஎஸ்டி வரி விதிப்பில், அதிரடி மாற்றம்..! 177 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, வரி குறைப்பு..

23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேன்று நடை பெற்றது. இதில் தினசரி பயன்பாட்டு தேவைப்படும் 177க்கும் அதிகமான பொருட்களின் வரி குறைக்கப்படுகிறது.

இதில் ஜவுளிகள் மீதான வரி 18 சதவீத்தில் இருந்த 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைகிறது, ரேஷன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுதும் ரத்து ஆகியவை முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைப்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் வரிகள் விதிக்கப்படுகின்றன. இதில், 28 சதவீதம் வரி விதிக்கப்படும் பொருட்களின் வரி விகிதம் 80 சதவீதம் குறைக்கப்பட்டு 18 சதவீதம் ஜிஎஸ்டிக்குள் பெரும்பாலான பொருட்கள் வந்துவிடும் என்றும் கருதப்படுகிறது. நியாய விலை கடைகளுக்கு செலுத்தப்படும் கமிஷன் மீதான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

* 177 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஷேவிக் கிரீம், பற்பசை உள்பட 177 பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு.
* ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5% ஆக குறைப்பு.
* விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆக குறைப்பு.
* செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைப்பு.
* சிகரெட் உட்பட பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களை 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு.
* திரைப்படம் தொடர்பான சாதனங்கள், கருவிகளுக்கு 28% லிருந்து 18% ஆக வரியை குறைக்க பரிந்துரைக்கபட்டு உள்ளது.
* 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரிப்பிரிவு

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.