1000 ஆண்டுகள் பழமையான கிணறு கண்டுபிடிப்பு!
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தின் கோவிலிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் திடீரென மணல் உள்ளே செல்வதை கண்டு ஆச்சர்யப்பட்டுள்ளனர்.
அங்கு சிறிய அளவிலான கிணறு ஒன்று இருப்பதை பார்த்து அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்த கிணறு 1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு என தெரிவித்தனர்.
மேலும் இந்த உறைகள் சுடுமண்ணால் செய்யப்பட்ட 20 செ.மீ உயரமும், சுமார் 2 செ.மீ அகலமும் கொண்டதாக இருந்தது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!
இதுகுறித்து காப்பாட்சியர் பிரபாகரன் கூறுகையில், இதை பரிசோதனைக்காக தொல்லியல்துறை தலைமைக்கு அனுப்ப உள்ளோம்.
அவர்கள் அனுமதி கொடுத்தால் ஆய்வு நடத்துவோம் என கூறினார். இந்த சம்பவம் அறிந்து பொதுமக்கள் பலரும் அங்கு கூடி ஆச்சர்யமாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்