சுமந்திரன் சுதந்திரம் கேட்டால் எப்படி இருக்கும் ? அண்ணை என்று கூப்பிடுங்கள் என்று அடம்
படத்தில பாத்தீங்க இல்ல... மகிந்தரை கண்டதும் சுமந்திரன் எப்படி வாயைப் பிழக்கிறார் என்று ... இனி விடையத்திற்கு வருவோம்...
சுமந்திரன் என்று சொன்னாலே, இப்ப எல்லாருமே அவரை ஒரு காமெடி பீசாக தான் பார்கிறார்கள். அதுவும் சுமந்திரன் என்றால் பலருக்கு தெரியாது. சுத்துமாத்து சுமந்திரன் என்றால் தான் மக்களுக்கு புரிகிறது என்ற நிலை வந்து விட்டது. சமீபத்தில் ஒரு TV க்கு பேட்டி கொடுத்த அவர், பிரம்மானந்த சாமியின் சீடன் தான் வடக்கு முதலமைச்சர், விக்கி அவர்கள். பிரம்மானந்தாவுக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்(அவர் சிறையில் உள்ளார்) அப்படி என்றால் அவர் சீடன் எப்படி இருப்பார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். சரி சத்திய சாயி பாபாவுக்கு உலகில் கோடிக்கணக்கான பக்த்தர்கள் உள்ளார்கள். ஆனால் அவர் தன்னை கற்பழித்தார் என்று பல ஆண்களும் பெண்களும் கூறுகிறார்கள். அப்படி என்றால் அந்த அனைத்து சீடர்களும் குற்றவாளிகளா ?
பிரபல வக்கீலாக இருக்கும் சுமந்திரன் இவ்வாறு கேணைத்தனமாக TVல் பேச, மக்கள் இதனைக் கேட்டு சிரிக்கிறார்கள். அட இந்த ஆள் இவ்வளவு அடி முட்டாளா என்று ... ! வட மாகாண சபை தேர்தல் பல தசாப்த்தங்களுக்கு பின்னர் , நடைபெற்றவேளை. நானும் சம்பந்தரும், மாவையும் சேர்ந்து நல்ல ஒரு மனிதரை நிறுத்தியுள்ளோம். அவர் நேர்மையானவர் ... படித்தவர் , பத்தும் தெரிந்தவர். அதனை விட அவர் நீதியரசராக இருந்தவர் என்று பினாத்தியதும் இதே சுமந்திரன் தான். இவருக்கு அன்று, ஐயா விக்கி அவர்கள் பிரம்மானந்தாவின் சீடர் என்று தெரியாதா ? அப்படி என்றால் சுமந்திரன் ஒரு அடி முட்டாள் என்று அவரே TV நிலையத்தில் நிரூபித்து சென்றுள்ளார் என்று, நாம் சொல்லவில்லை. இதனை பார்த்த பல மக்கள் சொல்லியுள்ளார்கள்.
வட மாகான சபைத் தேர்தலில் ஐயா விக்கி அவர்கள் அதிகப்படியான வாக்குகளை பெற்று, முதலமைச்சராக வந்தார். அதன் பின்னரே கூட்டமைப்பில் உள்ள பல குழப்பங்களை அவர் தெரிந்து கொண்டார். அதில் உள்ள பல முக்கிய தலைவர்கள் தமிழர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாராக இல்லை. மாறாக அரசியல் செய்யவே முற்பட்டார்கள். இதனை நன்றாக தெரிந்துகொண்ட ஐயா விக்கி அவர்கள், தான் ஆட்சியில் உள்ள காலத்தில் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என நினைத்து செயல்பட்டார். இதனால் தமிழர்கள் மத்தியில் அவர் செல்வாக்கு ஓங்கியது. உடனே இந்த ஓநாய்களுக்கு பொறுக்கவில்லை. உடனே தமது பொறுக்கி தனத்தை காட்ட முற்பட்டுவிட்டார்கள். இதன் ஒரு அங்கம் தான் வட மாகான முதல் அமைச்சரான விக்கி ஐயா மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர முற்படுகிறார்கள்.
இவர்கள் செய்யும் இந்த அசிங்கமான காரியத்தை , பார்த்து சிங்களவர்களே கை கொட்டி சிரிக்கிறார்கள். ஏன் என்றால் தமிழர்கள் ஒரு நாளும் ஒற்றுமையாக இருந்ததே இல்லை. அதனை வைத்து தான் அவர்கள் 50 ஆண்டுகளாக எம்மை வென்று வருகிறார்கள். இந்த அசிங்கத்தை தான் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து வருகிறது. லண்டனில் அதிர்வு இணையத்தை அணுகிய சில நபர்கள், பணம் தருகிறோம் விக்கினேஸ்வரன் அவர்களை பற்றி தாக்கி எழுதுங்கள் என்று நேரடியாக என்னிடம் கேட்டார்கள்... அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களோடு ஒத்துப் போகவில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார். இதனால் அவரை நாசமாக்க வேண்டும் என்று கூறினார்கள். பிழையான செய்திகளை போட்டு அவரை கேவலப்படுத்த வேண்டும் என்று கெஞ்சினார்கள்.
ஒட்டு மொத்தத்தில் இன் நபர்கள் சிங்களம் இழுக்கும் எடுப்புக்கு ஆடும் நபர்கள். இவர்கள் ஐயா விக்கினேஸ்வரன் அவர்களை தாக்கி எழுதவேண்டும் என்று கோருகிறார்கள் என்றால் நிலமை எப்படி இருக்கும் என்று நான் புரிந்துகொண்டேன். இது போக இனங்களுக்கு இடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்துகிறோம் என்று ஒரு புரோஜெக்ட், தமிழர் பிரச்சனையை தீர்க்கிறோம் என்று ஒரு புரோஜெக்ட், இப்படி எடுத்ததிற்கு எல்லாம் திட்டம் போட்டு அதனை ஆவணம் ஆக்கி காட்டி , வெளிநாடுகளிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தை கறந்துள்ளார் சுமந்திரன். இதனை பாவித்து சில மீடியாக்களையும் இவர் கைக்குள் போட்டு, தனக்கு தேவையான விதத்தில் அதனை கொண்டு செல்கிறார். இது உண்மை ஆகும். உண்மையில் சொல்லப் போனால் வட மாகாண முதல்வர் ஐயா விக்கினேஸ்வரன் அவர்கள், இதுவரை காலமும் தமிழர்களுக்கு நல்லதையே செய்துள்ளார். தெய்வ பக்த்தி கொண்டவர், ஆண்மீகத்தை நம்புவர். அதற்கும் மேலாக நீதியரசராக இருந்தவர். எனவே அவருக்கு நல்லது கெட்டது எது என்று தெரியும். அவருக்கு சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லை. அவரிடம் ஏற்கனவே பணம் உள்ளது.
எனவே உலகில் உள்ள அனைத்து தமிழர்களும், அவருக்கு ஆதரவாக இருப்பது நல்லது. நிலமையை புரிந்துகொண்டு நாம் செயல்பட்டு. தமிழர்களுக்கு ஒரு விடிவு கிட்ட பாடு படுவோம்.
அதிர்வுக்காக,
வல்லிபுரத்தான்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்