Header Ads

நடிகை காவ்யா மாதவனின் கடையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்: சூடுபிடிக்கும் பாவனா விவகாரம்


நடிகை பாவனா கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆடை நிறுவனத்தில் பொலிசார் சோதனை நடத்தியுள்ளனர். நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவன் சிறையில் இருந்தவாறு நடிகர் திலீப்புக்கு கடிதம் எழுதியுள்ளான். 


இதனால் நடிகர் திலீப்பிடம் பொலிசார் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர். இவரின் மனைவியான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆடை நிறுவனத்தை கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்த கொச்சி பொலிசார், திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது, அப்போது சில ஆவணங்களை பொலிசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் ரகசிய தகவல்களை மற்றொரு குற்றவாளியான ஜின்சனிடம் கூறியுள்ளார். 


இதனைதொடர்ந்து ஜின்சனை எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதியிடம் பல்சர் சுனில் கூறிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.