Header Ads

போலியான கிளேம்ஸ்: பிரிட்டன் நாட்டவர் ஸ்பெயின் ஹோட்டலில் தங்க தடை போடப் படலாம்



பிரித்தானியா நாட்டவர்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஹோட்டல்களில் தங்க தடை விதிக்கப்படலாம் என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. இது உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவில் இருந்து பல லட்சக் கணக்கான மக்கள் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அங்கே அவர்கள் ஹோட்டல்களில் தங்கி உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின்னர் நாடு திரும்பியதும். தாம் உண்ட உணவு சரியில்லை என்றும். இதனால் தாங்கள் பாதிப்படைந்ததாகவும் பொய்யான இன்சூரன்ஸ் கிளேமை போடுகிறார்கள்.

இதன் காரணமாக கடந்த 18 மாதங்களில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஹோட்டல்கள் சுமார் 50 மில்லியன் யூரோக்களை நஷ்ட ஈடாக கட்டியுள்ளார்கள். இதனால் ஸ்பெயின் நாட்டு அரசு பெரும் விசனமடைந்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து எவர் வந்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் உள்ள பல ஹோட்டல் உரிமையாளர்கள் தீர்மானித்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இதுபோன்ற கள்ள இன்சூரன்ஸ் கிளேம் 700 மடங்கால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறையை நன்றாக கழித்துவிட்டு. ரவல் இன்சூரன்ஸில் காசை கிளேம் செய்து செலவு செய்த காசை மீட்டு விடலாம் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு விடையம் புரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிகள் என்பது , பல நூறு இருந்தாலும். அதனை பிரித்தானியாவில் கட்டி ஆழ்வது , ஒரு சில நிறுவனங்கள் தான்.

ரவல் இன்சூரன்ஸ் செய்யும் அதே கம்பெனி தான் வேறு ஒரு பெயரில் கார் இன்சூரன்ஸையும் செய்கிறது. எனவே அவர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய , கார் இன்சூரன்சின் காசை கூட்டுவார்கள். ஒட்டு மொத்தத்தில் ரவல் இன்சூரன்சில் காசை பெற்று. கார் இன்சூரன்சில் காசை கூட கொடுக்க வேண்டி இருக்கும். அவ்வளவு தான். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.