பார்கிங் டிக்கெட் பணம் கட்டச் சென்று: A கிளாஸ் டிரக்கை நீதிபதி முன் விழுத்திய நபர்
அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில் இதுவும் ஒன்று. லீமா றீட் என்னும் 39 வயது நபர், சமீபத்தில் வாகனத்தை ஓட்டும் போதும் பின்னர் பார்க் செய்தபோதும் தவறிழைத்ததாக பொலிசாரால் குற்றஞ்சாட்டப்பட்டார். நீதிமன்றில் வந்து அதனை ஒப்புக்கொண்டால் குறைந்த அளவு தண்டப் பணத்தை கட்டி விட்டு செல்லலாம். அவ்வாறு நீதிமன்றம் வந்த அவர் நீதிபதிக்கு முன்னால் நின்றுகொண்டு இருந்தவேளை.
கையில் இருந்த தொப்பியை தற்செயலாக பிரட்டியுள்ளார். அதில் இருந்து வெள்ளைப் பொட்டலம் ஒன்று நிலத்தில் வீழ்வதை நீதிபதி அவதானித்துவிட்டார். அதில் சந்தேகம் கொண்ட அவர், நீதிபதி காவலாளிகளை அது என்ன என்று ஆராயுமாறு பணித்தார். அது கொக்கேய்ன் என்று அழைக்கப்படும் உயர் ரக போதைப் பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
தண்டப் பணம் கட்ட வந்த இடத்தில் இவ்வாறு மாட்டிக்கொள்வோம் என்று இவர் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. இதனை அடுத்து அதற்கும் சேர்த்து தண்டனைய அறிவிக்க உள்ளார் நீதிபதி. என்று தற்போது அறியப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்