ரஷ்ய உளவுக் கப்பல் திடீரென நீரில் மூழ்கியது: 78 ராணுவ சிப்பாய்கள் தப்பியது எப்படி ?
லீமா என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் அதி நவீன உளவு பார்க்கும் கப்பல், துருக்கிக்கி நாட்டுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் மூழ்கியுள்ளது. இதனை ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது. ஐரோப்பிய கடலில் சஞ்சரித்து , உளவு பார்க்கும் வேலைகளில் இக்கப்பல் ஈடுபட்ட வந்த நிலையில்.
கார்கோ கப்பல் ஒன்றுடன் இக் கப்பல் மோதியுள்ளது. இதனால் பலத்த சேதமடைந்த இக் கப்பல் , மெல்ல மெல்ல நீரில் மூழ்க ஆரம்பித்தது. அதில் பணியாற்றிய 78 ராணுவ உளவுப் பிரிவினரும் உடனடியாக அக்கப்பலில் இருந்து அகற்றப்பட்டு, சிறிய படகுகள் மூலம் கடலில் தங்கி நின்றவேளை. ரஷ்ய துருப்பு காவி ஹெலிகொப்டர் மூலம் அவர்கள் அனைவரும் அவ்விடத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்