சற்று முன் லண்டனில் Willesden என்னும் இடத்தில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள்
வடக்கு லண்டனில் உள்ள வில்ஸ்ட்டன் என்னும் இடத்தில், அமைந்துள்ள வீடு ஒன்றின் மேல் பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். ஜன்னலை நோக்கி பொலிசார் சுட்டதில் பெண் ஒருவர் காயமடைந்ததாகவும். வீட்டில் இருந்த 4 பேரையும் பொலிசார் கைது செய்து சென்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
பயங்கரவாதிகள் தங்கி இருந்த வீடு என்று கருதப்படும் ஒரு வீட்டையே பொலிசார் முற்றுகையிட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்