Header Ads

சிங்கள ஆமிக்காரன்: கடத்திய தமிழ் இளைஞர்களை வெட்டி களணி ஆற்றில் வீசி எறிந்தோம்: பகீர் தகவல்



கடத்­தப்­பட்­ட­வர்­க­ளைக் கடற்­ப­டை­யி­னர் கொலை செய்து துண்டு துண்­டாக வெட்­டிக் களனி கங்­கை­யில் வீசி­யதா ­கவும், திரு­கோ­ண­ம­லை­யில் அமைந்­தி­ருந்த நிலத்­தடி முகா­மில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் சட­லங்­களை பொலித்­தீ­னில் சுற்றி கெப் வண்­டி­யில், முகா­முக்கு வெளியே எடுத்­துச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் நீதி­மன்­றில் அறிக்­கை­யிட்­டுள்­ள­னர்.

மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் தலை­ந­கர் கொழும்பு மற்­றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளி­லி­ருந்து 5 மாண­வர்­கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்­டுக் காணா­மற்­போ­கச் செய்­யப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு நீதி­மன்­றில் நேற்­று­முன்­தி­னம் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, முதன்­மைச் சாட்­சி­யா­ள­ரான கப்­டன் வெகெ­தர ஆகி­யோ­ரின் வாக்கு ­மூலங்­க­ள் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் தான் மேல் கண்டவாறு கூறப்பட்டுள்ளது என, அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

பொலிஸ் பரி­சோ­த­கர் நிசாந்த சில்வா மன்­றுக்கு மேல­திக விசா­ரணை தொடர்­பில் எடுத்­து­ரைத்­தார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இந்த விவ­கா­ரம் தொடர்­பில் நான் விசா­ரணை செய்து வரு­கின்­றேன். கடத்­தப்­பட்ட 11 பேரும் கொழும்பு சைத்­திய வீதி­யில் உள்ள பிட்டு பம்பு, திரு­கோ­ண­மலை நிலத்­த­டிச் சிறைக் கூட­மான கன்­சைட் ஆகி­ய­வற்­றில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­குத் தெளி­வான ஆதா­ரங்­கள் உள்­ளன.  இந்­தக் ­கடத்­தல்­கள் கடற்­படை லெப்­டி­னன்ட் கொமாண்­டர் ஹெட்டி ஆராச்­சி­யின் கீழ் இயங்­கிய குழு­வி­ன­ரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள­ மைக்­கான ஆத­ரங்­கள் உள்­ளன.

அவை அனைத்­தும் இன்று மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. சம்­ப­வம் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளில் பல தக­வல்­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Ethanai ponukalinda Vazkayai seeralichirupangal

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.