சிங்கள ஆமிக்காரன்: கடத்திய தமிழ் இளைஞர்களை வெட்டி களணி ஆற்றில் வீசி எறிந்தோம்: பகீர் தகவல்
கடத்தப்பட்டவர்களைக் கடற்படையினர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிக் களனி கங்கையில் வீசியதா கவும், திருகோணமலையில் அமைந்திருந்த நிலத்தடி முகாமில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பொலித்தீனில் சுற்றி கெப் வண்டியில், முகாமுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்து 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமற்போகச் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, முதன்மைச் சாட்சியாளரான கப்டன் வெகெதர ஆகியோரின் வாக்கு மூலங்கள் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் தான் மேல் கண்டவாறு கூறப்பட்டுள்ளது என, அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மன்றுக்கு மேலதிக விசாரணை தொடர்பில் எடுத்துரைத்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இந்த விவகாரம் தொடர்பில் நான் விசாரணை செய்து வருகின்றேன். கடத்தப்பட்ட 11 பேரும் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள பிட்டு பம்பு, திருகோணமலை நிலத்தடிச் சிறைக் கூடமான கன்சைட் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இந்தக் கடத்தல்கள் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சியின் கீழ் இயங்கிய குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள மைக்கான ஆதரங்கள் உள்ளன.
அவை அனைத்தும் இன்று மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ethanai ponukalinda Vazkayai seeralichirupangal
ReplyDelete