Header Ads

இவர் உண்மையில் ஜனாதிபதியா ? ஹவாய் நீதிபதியின் உத்தரவால் ட்ரம்ப்பின் உத்தரவு முடக்கம்



அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதிக்கும் இப்படி நடந்ததே இல்லை எனலாம். ஹவ்வாய் நீதிமன்ற உத்தரவால் ரம்பின் உத்தரவு மேலும் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய உத்தரவு செயற்படுத்தப்படுவதற்குச் சில மணி நேரங்களே இருந்த நிலையில், அந்த உத்தரவுக்குத் தடை விதித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் நீதிபதியொருவர். உலகின் ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதைத் தற்காலிகமாகத் தடை செய்யுமாறு ட்ரம்ப்  புது  உத்தரவை பிறப்பித்தார்.

இந்நிலையில், நேற்று ஹவாயின் நீதிபதி டெரிக் வொட்சன் இந்தத் தடையைத் தற்காலிகமாக விலக்குவதாகத் தீர்ப்பளித்தார். நாற்பத்து மூன்று பக்கங்கள் கொண்ட இந்த உத்தரவில், டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சு மற்றும் அவருக்கு நெருங்கிய ஆலோசகர்களினது பேச்சுக்கள் முஸ்லிம்களை அவமதிப்பதாக இருப்பதை உறுதிசெய்கிறது என்று குறிப்பிட்டிருக்கும் வொட்சன், இது அமெரிக்க சட்டங்களை மீறும் செயலாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் டொனால் ரம்பால் தற்போது எதுவும் செய்ய முடியாமல் உள்ளது.

என்ன உத்தரவை கொண்டுவந்தாலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் அது செல்லாது என்று தடுத்து விடுகிறார்கள். இதனால் கையாலாகாத ஜனாதிபதியாக மாறி டொனால் ரம் பெரும் தவிப்பில் உள்ளார். அத்தோடு அமெரிக்க மக்கள் மத்தில் பெரும் செல்வாக்கையும் அவர் இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.