லண்டன் ஈழத் தமிழர் 4 பேர் மும்பையில் கைது: பாஸ்போட் கொண்டு போய் இந்தியாவில் மோசடி
லண்டனில் பெறப்பட்ட விசா ஸ்டிக்கர்களை இந்தியா கொண்டு சென்று. அங்குள்ள தமிழர்கள் சிலருக்கு இந்திய பாஸ்போட்டை எடுத்து. அதில் பிரித்தானிய விசா ஸ்டிகர்களை ஒட்டி பிரித்தானியா அழைத்து வர முற்பட்ட பலர் மும்பை ஏர் போட்டில் கைதாகியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. பிரிட்டனில் இருந்து களவாகப் பெறப்பட்ட விசா ஸ்டிகர்களை கொண்டு சென்ற இந்த கோஷ்ட்டி, இந்தியாவில் சில தமிழர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி.
இந்திய பாஸ்போட்டை எடுக்கச் சொல்லியுள்ளார்கள். பின்னர் அவர்களிடம் பெரும் பணத்தை பெற்று. அவர்களை மும்பாய் வழியாக லண்டன் அழைத்துவர முற்பட்டவேளை. மும்பை ஏர்போட்டில் சந்தேகப்பட்ட குடிவரவு அதிகாரிகள் சுமார் 8 பேரையும் கைதுசெய்து கடந்த 2 தினங்களாக விசாரித்து வருகிறார்கள். இதில் 4 லண்டன் தமிழர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது. மேலும் 4 தமிழர்கள், கள்ளமாக பெறப்பட்ட இந்திய பாஸ்போட்டை வைத்திருந்துள்ளார்கள்.
இதனை இவர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்ற விசாரணையை தமிழ பொலிசார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. இதன் பின்னணியில் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்