Header Ads

சற்று முன் லண்டன் பார்லிமென் முன்னால் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி என அதிர்வு அறிகிறது







சற்று நிமிடங்களுக்கு முன்னர் லண்டன் பாராளுமன்றம் முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது பயங்கரவாத தாக்குதல் என்று பொலிசார் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிவித்துள்ளார்கள். வேகமாக வந்த கார் ஒன்று சுமார் 5 பேரை இடித்து தள்ளியுள்ளதாக அறியப்படுகிறது. அத்தோடு பாதுகாப்புக்கு நின்ற பொலிசார் உடனடியாக தாக்குதல் நடத்தியதில் காரை ஓட்டி வந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு.

அவ்விடத்தையே பொலிசார் லாக் டவுன் செய்து பாரிய தேடுதல் வேட்டை ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதுபோக பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து MPக்களும், உடனே பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் காலவரை யறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.