Header Ads

வட கொரியா அமெரிக்க யுத்தக் கப்பலை தகர்த்து எறிந்தது: வெளியான வீடியோவால் பரபரப்பு



வட கொரியா யுத்த விமானங்கள், அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றை முற்றாக தாக்கி அழிப்பது போன்ற வீடியோ ஒன்றை அன் நாட்டு அதிபர் வெளியிட்டு. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ நிஜமான வீடியோ இல்லை என்பது ஒரு புறம் இருக்க. அமெரிக்காவின் நாசகார கப்பலை, எவ்வாறு தாக்குவது என்றும். அதில் உள்ள பாதுகாப்பு , ஆயுதங்களை எவ்வாறு செயல் இழக்கச் செய்வது என்றும் வட கொரியா இந்த வீடியோவில் காண்பித்துள்ளார்கள்.

இன் நடவடிக்கை தான் அமெரிக்காவை மேலும் ஆத்திரமடைய வைத்துள்ளது என்கிறார்கள். குறித்த வீடியோவை தேசிய தொலைக்காட்சிகளில் எல்லாம் போட்டு. மக்கள் மத்தியில் பெரும் கை தட்டலை வாங்கியுள்ளார் வட கொரிய அதிபர். நிஜத்தில் இவை எல்லாம் நடக்குமோ என்னமோ. ஆனால் வீடியோவிலாவது இப்படி போட்டு காட்டி வட கொரியா மகிழ்ச்சியடைந்துள்ளதே ..


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.