சற்று முன் பரிசில் குண்டு வெடிப்பு: என்வலப்பில் குண்டை அனுப்பி உள்ளது அல்-கைடா
பரிஸ் நகரில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு , சற்று முன்னர் கடிதங்கள் வந்துள்ளது. தபால் மூலம் வந்த இக் கடிதங்களில் ஒரு கடிதம், துருக்கி வெளிநாட்டு அமைச்சின் முத்திரையோடு வந்துள்ளது. இதனை அங்கே வேலை செய்யும் பெண் ஒருவர் பிரிக்க முற்பட்டவேளை, அது வெடித்து சிதறி அவரை பெரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு தாமே காரணம் என்று அல்-கைடா தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளார்கள். ஆனால் துருக்கி அரசின் முத்திரைகளை எவ்வாறு பயன்படுத்தி இதனை அனுப்பினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. குறித்த முத்திரைகள் தபால் தலை முத்திரை அல்ல. அவை மிகவும் பிரத்தியேகமான அமைச்சரவை அடையாளம் பொருந்திய முத்திரைகள் ஆகும்.
இதனை களவாகப் பெற்று இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே கடிதத்தில் குண்டை அனுப்ப அல்-கைடா தீவிரவாதிகள் நன்றாக கற்றுக்கொண்டு விட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரித்தானியா ஜேர்மன் உட்பட பல நாடுகள் இனி கடிதங்களையும் , ஸ்கேன் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அத்தோடு அரசாங்க அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களையும் மேலதிக சோதனைக்கு உட்படுத்த வேண்டி உள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்