புட்டின் 100 மில்லியன் பிளாட்டினம் சுரங்கம் இது தான்: எவ்வாறு கோடிக்கணக்கில் பணம் என்று தெரியுமா
உலகின் பலம் பொருந்திய நாடுகளின் பட்டியலில் இருக்கும் ரஷ்யாவின் அதிபராக பல காலம் இருந்து வருபவர் விலாடுமில் புட்டின். அவர் ஒரு பெரும் செல்வந்தர் என்பது பலர் அறியாத விடையம். உலகில் உள்ள பல முன்னணி செல்வந்தர்களின் அவரும் ஒருவர். ஆனால் அவர் அந்த பட்டியலில் இடம்பெறுவதே இல்லை. காரணம் அவர் வைத்திருப்பது அனைத்தும் ஒரு வகையில் கறுப்பு பணம் என்கிறார்கள்.
அவருக்கு ரஷ்யாவில் ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளது. அதில் ஒரு நிறுவனம் தான் பிளாட்டினம் சுரங்கம். தங்கத்தை விட அதிகூடிய விலை மதிப்பை பெற்றது பிளாட்டினம் ஆகும். இது ரஷ்யாவில் ஒரு பகுதியில் பள்ளத்தாக்கு போன்ற ஒரு இடத்தில் காணப்படுகிறது. பாரிய விண் கல் ஒன்று வந்து இங்கே பல ஆண்டுகளுக்கு முன் வீழ்ந்ததாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் தோண்ட தோண்ட பிளாட்டினம் கிடைக்கிறது. எப்படியோ அந்த இடத்தை வளைத்துப் போட்ட புட்டின், தற்போது அதில் இருந்து பிளாட்டினத்தை எடுத்து விற்று வருகிறார். ஆண்டு தோறும் இதனூடாக சுமார் 100 மில்லியன் பவுண்டுகளை அவர் ஈட்டி வருவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கபப்ட்டுள்ளது. ஆனால் கணக்கில் காட்டாமல் பல மில்லியன் பவுண்டுகளை அது பெற்று வருகிறது என்பதும் பலரால் அறியப்பட்ட விடையம்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்