அமெரிக்காவுக்கு ஆப்பு: விண்ணில் வைத்தே அமெரிக்க உளவு சட்டலைட்டை நாசம் செய்யும் சீனா
சீனா தனது லேசர் சட்டலைட்டை முதன் முறையாக விண்ணுக்கு ஏவ உள்ளது. அமெரிக்கா லேசர் ஆயுதம் பொருத்தப்பட்ட சட்டலைட் ஒன்றை ஏற்கனவே விண்ணுக்கு அனுப்பிவிட்டது. இதனூடாக போர் என்று ஆரம்பித்தால், முதலில் சீனாவின் உளவு பார்க்கும் முக்கிய சாட்டலைட்டை தாக்கினால் போதும். சீனாவின் பல ராணுவ நகர்வுகளை அமெரிக்காவால் தடுக்க முடியும்.
அத்தோடு சீனாவால் ஏவப்படும் பல ஏவுகணைகள் சீன சாட்டலைட் உதவி இன்றி தாக்குதல் நடத்த முடியாது. இதன் காரணமாகவே அமெரிக்கா லேசர் ஆயுதம் கொண்ட சாட்டலைட்டை விண்ணில் ஏவியது.
விண்வெளியில் அந்த சாட்டலைட் எதிரி நாட்டு சாட்டலைட்டை தாக்கி அழித்துவிடும். ஆனால் தற்போது சீனா அதி நவீன சாட்டலைட் ஒன்றை விண்ணுக்கு ஏவ உள்ளது. அதில் லேசர் ஆயுதம் பொருத்தப்பட்டு இருப்பதை அமெரிக்க உளவுத்துறை எப்படியே அறிந்துவிட்டது. இது இரண்டு நாடுகளுக்கும் இடையே மேலும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனாவுடன் உள்ள சில ராஜதந்திரிகளோடு , இது தொடர்பாக பேசிவருகிறது என்றும் மேலும் அறியப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்