ஜேர்மனியில் உள்ள முஸ்லீம் நிலையம் மீது பொலிசார் பாரிய முற்றுகை கைதானவர் யார் ?
ஜேர்மனியில் உள்ள 54 இடங்களை பொலிசார் சல்லடை போட்டு தேடியுள்ளார்கள். இவை அனைத்துமே முஸ்லீம் ஸ்தலங்கள், வழிபாட்டு இடங்கள் மற்றும் முஸ்லீம்கள் தங்கும் விடுதிகள் ஆகும். இவர்கள் குறிப்பாக ஒரு நபரை குறிவைத்தே தேடுதலை நடத்தியுள்ளார்கள். இறுதியில் அன் நபரை பொலிசார் திடீரென கைதுசெய்துள்ளார்கள். குறித்த நபர் துனீசிய நாட்டு முஸ்லீம் எனவும்.
இவர் ஜேர்மனியில் உள்ள பல அகதி முகாம்களுக்குச் சென்று. அங்கே உள்ள முஸ்லீம் இளைஞர்களோடு பேசி, அவர்களை ஐ,எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக மாற்ற முற்பட்டுள்ளார். இவர் சற்று நேரம் பேசினால் போதும். சாதாரண இளைஞர்களது மூளையைச் சலவை செய்து தனக்கு தேவையான வகையில் மாற்றிவிடுவார். அவ்வளவு பேச்சு திறன் கொண்டவர் என்றும். மிக மிக ஆபத்தான் நபர் என்றும் ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்