உங்களை பின் தொடரும் சூட் கேஸ்: 40 கிலோ வரை கொண்டு செல்ல முடியும்: வெஸ்பா
வெஸ்பா (VESPA) என்றால் பலருக்கு தெரியும், அது மோட்டார் பைக்கை தயாரிக்கும் ஒரு பெயர் போன நிறுவனம். பல ஆண்டுகளாக அது பிரபல மோட்டார் பைக்குகளை தயாரித்து தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது இன் நிறுவனம் உங்களை பின் தொடர்ந்து வரக்கூடிய சூட் கேஸ் ஒன்றை கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளது. சுமார் 40 கிலோ வரை எடையுள்ள பொருட்களை நீங்கள் அதனுள் போடலாம்.
நீங்கள் நடந்து சென்றால், அது உங்களை பின் தொடர்ந்து தானே வரும். எஜமான் யார் என்பது அந்த சூட் கேசுக்கு தெரியும். ஏர் போட் , வீதி. ஷாப்பிங் சென்ரர் என்று எங்கே சென்றாலும் அது உங்களை பின் தொடரும். எனவே நீங்கள் கஷ்டப்பட்டு அதனை உருட்டிச் செல்லவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். இந்த புதுக் கண்டு பிடிப்பை தனது சொந்த உரித்தாக்கியுள்ள இக்கம்பெனி.
வெகு விரைவில் குறித்த சூட்கேசை வெளியிட உள்ளது. அதுவும் மிகக் குறைந்த விலையில்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்