யாழ் நீதிமன்றில் உயர் பாதுகாப்புடன் கொலைகாரர்களுக்கு சார்பாக வாதிட்ட சுமந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, யாழ்.மேல் நீதிமன்றில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நடைபெற்றது.
குறித்த வழக்கின் கொலையாளிகளான எதிரிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்த நிலையில், யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியை சூழவுள்ள பகுதியில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, அவரது வாகனத் தொடரணிக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமந்திரனைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் போராளிகள் ஐவரைக் கைதுசெய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைத் தடுத்துவைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்