வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ரம்பின் மனைவி- காரணம் என்ன தெரியுமா
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்துள்ளார்.சமீபத்தில் கூட இவரது மகள் இவாங்கா ட்ரம்ப் தனது குழந்தையுடன் வெள்ளை மாளிகையில் விளையாடுவது தொடர்பான வீடியோ வெளியானது.
இந்நிலையில், தனது கணவர் பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த மெலேனியா ட்ரம்ப் சுமார் 2 வாரங்கள் மட்டுமே அங்கு வசித்துள்ளார்.அதன் பின்னர், அங்கிருந்து வெளியேறி தனது மகள் Barron- டன் நியூயோர்க்கில் வசித்து வருகிறார். வருகின்ற யூன் மாதம் வரை மெலேனியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வசிக்க மாட்டார் என கூறப்படுகிறது.
ஏனெனில், வெள்ளை மாளிகை வாஷிங்டனில் அமைந்துள்ளது. தனது மகள் நியூயோர்க்கில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறான். அவனது படிப்புக்காலம் வருகிற யூன் மாதத்தோடு தான் நிறைவடைகிறது.இதனால் தனது மகனுடன் தங்கியிருந்து அவனது படிப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும், யூன் மாதத்திற்கு பின்னரே வெள்ளை மாளிகைக்கு குடிபெயர்வார் எனவும் கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்